by N S Boopalan on | 2025-04-07 11:23 PM
தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் அவரை ஆதரித்து சமூக வலைதளம் மூலம் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டுமென்றால், கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்று அவரை கட்டம் கட்டியதால் டெல்லி மேலிடம் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு அண்ணாமலை மத்திய அமைச்சரவையில் பெரிய பதவி கிடைக்கப்போகிறது எனவும் கூறுகின்றனர். இப்படி இருக்கையில், சுலபமாக தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கி விட முடியாது என்று ஒரு பக்கம் தகவல் கிடைத்துள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அதனை தமிழக பாஜக நிர்வாகிகளும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், மேலிடம் தீவிர ஆலோசனை செய்ய இருப்பதாக கூறுகின்றனர்.
மேற்கொண்டு தனிக் குழு அமைத்து அதிமுகவுடன் இது குறித்து பேச நயினார் நாகேந்திரனை அனுப்பி வைக்கவும் டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். இந்த ஆலோசனையில் அதிமுக இணங்கும் பட்சத்தில் மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என கூறப்படுகிறது.