by Vignesh Perumal on | 2025-04-07 07:54 PM
ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்கள் சென்ற கார் பொன்னேரி அருகே விபத்தில் சிக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இன்று (ஏப்ரல் 7, 2025) காலை சோழவரம் அருகே ஜி.என்.டி சாலையில் சென்பிலி சோழவரம் சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த ஆணையரின் கார் மீது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆணையர் சங்கர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவரது பாதுகாவலர் மாரி செல்வம் கையில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன்னேரியில் 19-ம் தேதி நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஆணையர் சங்கர் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.