by N S Boopalan on | 2025-04-07 06:47 PM
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறை அறிவித்துள்ள நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது. அவர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும்.
அப்போது இருந்த நீதிபதிகள் அமலாக்கத்துறை இது தொடர்பாக விசாரணை நடந்த கூடாது என்றும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க துறை விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டதை தொடர்ந்து, அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்று சர்ச்சை வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன் அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் டாஸ்மாக் நிறுவனம் கூறுவது போன்று நாங்கள் ஊழியர்களை கொடுமை படுத்தவில்லை, 60 மணி நேரம் நடந்த சோதனையில் சுமார் 3 மணி நேரம் தான் ஒவ்வொரு அதிகாரிகளையும் விசாரித்தோம், மேலும் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு டாக்ஸி உட்பட அனைத்துமே ஏற்பாடு செய்தோம் என்று விளக்கம் கொடுத்தனர்.
இந்த நிலையில் எஸ் எம் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும், இதற்கு மேல் இந்த வழக்கை கால தாமதம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணை நடத்தலாமா.? வேண்டாமா.? என்ற தீர்ப்பு உறுதி செய்யப்படும்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் நேர்மையான நீதிபதி என்று பெயர் பெற்றவர். குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு நீதிபதி வீட்டில் பணம் சிக்கியதை தொடர்ந்து, நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்ததும் உயர்நீதிமன்றத்தில் உள்ள 67 நீதிபதிகளில் 5 நீதிபதிகள் மட்டுமே சொத்துக்களை தாக்கல் செய்தார்கள்.
அந்த ஐந்து நீதிபதிகளில் ஒருவர் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன், அந்த அளவுக்கு மிக நேர்மையான நீதிபதியாக இருந்தவரும் நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியன் அவருடைய அறையில், கண்ணாடி கதவு போட்டு, கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறார். அதாவது ஒளிவு மறைவின்றி வேலை செய்ய வேண்டும் என்பதிலும், தன் மீது எந்த வகையிலும் களங்கம் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன்.
அந்த வகையில் இந்த வழக்கின் கடந்த முறை விசாரணையின் போது டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம், அமலாக்க துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மென்மையாக விசாரணையை மேற்கொள்ள முடியாது, அதனால் தான் அவர்களுக்கு கூடுதலாக பவர் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கொடுத்த பதில், தமிழக அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் சாட்டையடியாக அமைந்தது.
அந்த வகையில் நிச்சயம் வரும் 9 ஆம் தேதி இந்த வழக்கை முடித்து தீர்ப்பு சொல்ல இருக்கும் எஸ் எம் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு நீதிமன்றம். இந்த வழக்கை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி வர இருக்கும் தீர்ப்பு மிகப்பெரிய ஆப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது அமலாக்க துறையை சீண்டுவது போன்ற அமைந்துள்ளதால், இந்த வழக்கை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அமலாக்கத்துறை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.