by Muthukamatchi on | 2025-04-07 02:49 PM
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் மாதந்தோறும் நடத்தப்படும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் (Civil Supplies Grievance meeting) மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் இம்மாதம் 12.04.2025 – அன்று நடைபெற உள்ளது.இதன்படி, தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 2025–ஆம் மாதத்தில் 12.04.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடத்திட தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் விவரம் பின்வருமாறு:
வ.எண் | வட்டம் | முகாம் நடக்கும் கிராமம் | கடை எண் | முகாம் நடக்கும் இடம் | மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்படும் துணை ஆட்சியர்கள் |
1 | பெரியகுளம் | வடுகபட்டி கிராமம், | 23BP003PN 23BP028PN | நியாய விலைக்கடை வடுகபட்டி கிராமம் | திரு.ரஜத்பீடன், இ.ஆ.ப., |
2 | தேனி | ஊஞ்சாம்பட்டி கிராமம் | 23AP012PN 23AP038PN | நியாயவிலைக்கடை, ஊஞ்சாம்பட்டி கிராமம் | திரு.ப.நேரு |
3 | ஆண்டிபட்டி | வாலிப்பாறை கிராமம் | 23CB019PN | நியாயவிலைக் கடை, வாலிப்பாறை கிராமம் | திரு.மு.கதிர்வேல் உதவிஆணையர் (கலால்) (பொ) தேனி. |
4 | உத்தமபாளையம் | கருநாக்க முத்தன்பட்டி கிராமம் | 23DE023PN 23DW002PN | நியாய விலைக்கடை கருநாக்க முத்தன்பட்டி | திரு.மு.செய்யதுமுகம்மது வருவாய் கோட்டாட்சியர், உத்தமபாளையம். |
5 | போடிநாயக்கனூர் | காமராஜபுரம் கிராமம் | 23EP011PN | நியாய விலைக்கடை, காமராஜபுரம் கிராமம் | திருமதி. ந.மாரிச்செல்வி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தேனி. |