by Vignesh Perumal on | 2025-04-07 01:06 PM
எவிடன்ஸ்
"சீமான் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும்" என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டிஐஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு இடையே நிலவி வருகிறது. திருச்சி எஸ்.பி.யாக இருந்தபோது வருண்குமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்ததை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், தன்னையும் தனது குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சித்ததாக சீமான் மீது வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 7, 2025) விசாரணைக்கு வந்தபோது, சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.