by Vignesh Perumal on | 2025-04-03 08:45 PM
ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக விளைச்சல் தரக்கூடிய அல்லது தரம் உயர்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் எனில் அப்பொருள்களுக்கு அங்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அதாவது, குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும், நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய், கொடைக்கானல் மலை பூண்டு, தேனி திராட்சை, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இருப்பினும் தற்பொழுது, பண்ருட்டி பலாப்பழம் உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அதாவது, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அதேபோல, ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கும் புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீட்டை சேர்த்து தமிழகத்தில் 69 குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!