by admin on | 2026-06-28 11:18 AM
சென்னையில் தமிழக மக்கள் மாற்றுத்திறனாளிகள் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத் திறப்பு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை போரூர் ஆலாப்பாக்கம் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள புதிய கட்சி அலுவலகக் கட்டிடம் இன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியேற்று நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு, '38 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்' என்று அழைக்கப்படும் கழகத்தின் நிறுவனத் தலைவர் கோயம்பேடு VIP Dr. R. ராஜா மணிகண்டன் அவர்கள் தலைமை தாங்கினார்.
விழாவில், மாநில பொதுச் செயலாளர் Dr. G. முருகன், சென்னை உயர்நீதிமன்ற சட்ட ஆலோசகர் A. பாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்து விழாவினைச் சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை, திண்டிவனம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் உள்ள விழா மேடையில், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூன்று சக்கர மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், வாக்கர், எல்போ ஸ்டிக், சோல்டர் கச்சஸ் மற்றும் அன்றாடத் தேவையான காய்கறித் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !