by Vignesh Perumal on | 2025-04-03 02:53 PM
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மருதன் இவருக்கு வயது 49 ஆகிறது. வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிருஷ்ணன் மகன் மருதன் இறந்ததை கேள்விப்பட்ட அவரது சகோதரி புஷ்பம், தனது கணவன் ஊரான நாடார்வேங்கைப்பட்டியில் இருந்து தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
உயிரிழந்த தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுத போது சகோதரி புஷ்பத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். மருதனுக்கு, 2 சகோதரர்களும், 2 சகோதிரிகளும் இருந்துள்ளனர். இச்சூழலில்,புஷ்பம் தான் அனைவருக்கும் மூத்தவர், மருதன் அனைவருக்கும் இளையவர். தந்தை கிருஷ்ணன் இறந்துபோது, மருதன் சிறியவர் என்பதால், அவரை சகோதரி புஷ்பம் பாசத்துடன் பாதுகாத்து வந்துள்ளார்.
இதன் காரணமாகவே சகோதரி புஷ்பா, சகோதரர் மருதன் இருவரும் உண்மையான பாசமலர்களாகவே வாழ்ந்துள்ளனர். அதீத பாசத்தோடு வளர்த்த ஆருயிர் தம்பி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தில் புஷ்பமும் இறந்துள்ளார். இருவரது உடலையும் அவரவர் ஊர்களில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறப்பிலும் இணைபிரியா மருதன், புஷ்பம் பாசமலர்களின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியது. சகோதரி புஷ்பத்தின் கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது ஒரு மகனுடன் அவர் வேங்கைப்பட்டியில் வசித்து வந்துள்ளார். மருதன், தனது மனைவி, 2 ஆண்குழந்தை, ஒரு பெண்குழந்தையுடன், சாமியாடி களத்தில் வாழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!