by Vignesh Perumal on | 2025-04-03 02:33 PM
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயிலும் மையத்தில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினவிழா நடைபெற்றது. இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா அவர்கள் உதவி திட்ட அலுவலர் திரு.சரவண முருகன் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி டி.கல்லுப்பட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி SRPC மையத்தில் இன்று உலக புற உலக சிந்தனையற்றோர்கான விழிப்புணர்வு தினம் "world Autism Day" கொண்டாடப்பட்டது.
இதில் இம்மையத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் பல்சுவை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்வித்தனர். விழாவில் முதலாவதாக தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் ஆரம்பித்தது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஷீபா ராணி அவர்கள் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி. கோப்பெரும் தேவி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள்.
உடன் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் தயாநிதி அவர்கள் முன்னிலை வகித்தார். அனைவரும் மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பு பயிற்றுநர்கள் செல்வி மரியாள், லத்திகா, சரவணக்குமார் மற்றும் மையத்தின் பாதுகாவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது இறுதியில் இயன்முறை மருத்துவர் நந்தினி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!