by Vignesh Perumal on | 2025-04-03 02:24 PM
இந்தியா முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய அமைப்புக்கு சொந்தமான் சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அச்சமயம் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை உருவாக்கியது. அந்த அறிக்கையில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இச்சட்ட மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.
இந்த மசோதா மீது சுமார் 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. இருப்பினும், மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் அதற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கையாக, இந்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றனர். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் சுமார் 8 மணி நேரம் வரை விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!