by Vignesh Perumal on | 2025-04-03 12:35 PM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் கோடைக்காலம் என்பதால் விவசாய நிலத்திற்குள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் புள்ளிமான்களை வளர்ப்பு வேட்டை நாய்கள் வைத்து சிலர் கும்பல் வேட்டையாடி வந்துள்ளனர். இந்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மலையடிவாரப் பகுதிகளில் ரகசியமான ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
அச்சமயம், ரெங்கர் கோயில் பீட்டிற்கு உட்பட்ட விவசாய தோட்டத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் மான்களை சிலர் வேட்டையாடி உள்ளனர். குறிப்பாக , ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் (30), முத்துகிருஷ்ணன் (38) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வேட்டைக்காரர்களிடம் இருந்து சுமார் 4 வயது இருக்கக்கூடிய புள்ளிமான் தலை மற்றும் அதன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கைது செய்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேட்டைக்கு உதவியாக இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரகுமார் (26), நாகராஜ் (34) ஆகியோரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி, வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!