by Vignesh Perumal on | 2025-04-03 09:23 AM
தென்னிந்திய திரைப்படத்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் சில காட்சிகளில் 'நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தற்போது இல்லாவிட்டாலும் இந்த அணையால் மக்களுக்கு ஆபத்து உள்ளது. அணையை காப்பாற்ற தடுப்பணை என்னும் சுவர்களால் எந்த பயனும் இல்லை. இங்கு அணையே இல்லாமல் இருந்தால்தான் சரியாகும்' என்ற வசனமும் அதில் உள்ளது.
அதுமட்டுமின்றி, படத்தில் வரும் நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாக கூறினாலும் 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட அணை முல்லைப் பெரியாறு என்பது தான் நிதர்சனம். முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக தேக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அத்தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மழை அதிகரித்து அணை நீர்மட்டம் உயரும்போது அணை உடைவது போன்ற கிராபிக் காட்சிகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இச்சூழலில் கேரளா மாநிலத்தில் இருக்கும் சில இயக்கங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 2011 நவம்பர் மாதம் 'டேம் 999' என்ற திரைப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மோகன்ராய் இத்திரைப்படத்தை எடுத்திருந்தார். அணை உடைப்பு ஏற்படும் போது நிகழும் அழிவுகளை மையக் கருத்தாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்து பிரச்னை இருந்த காலகட்டத்தில் இப்படம் மக்களை அச்சத்தில் ஏற்படுத்துவது போல் இருந்தது.
இச்சூழலில், தற்போது எம்புரான் திரைப்படம் மூலம் பெரியாறு அணை பிரச்னையை தூண்டுவது போல உள்ளது. பல்வேறு நிபுணர் குழுக்களால் அணையை ஆய்வு செய்த பின் 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த திரைப்படத்தில் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளது அதை உடனடியாக நீக்க வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் கம்பம் பகுதி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் மதிமுக., பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழகத்தில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், கூடலுார் தெரிந்து வருகிறார்.
முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தேக்கியே தீருவோம் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை ஒரு சதவீதம் கூட இதுவரை நிறைவேறவில்லை எனவும். தற்போது, முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ள எம்புரான் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!