by Vignesh Perumal on | 2025-04-02 09:31 PM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம் Hyundai Glovis India pvt ltd என்ற நிறுவனத்தின் பங்களிப்பின் மூலம் மதுபோதையால் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினருக்கு காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் 40 Breath analyser கருவிகளை வழங்கினார்கள். அப்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், உயிரிழப்பு மற்றும் உடல்நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். இது ஒரு தீவிரமான சமூகப் பிரச்சனையாகும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், உடல்நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து நிறுத்தங்களின் போது, காவல்துறை அதிகாரிகள் மூச்சுப் பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண்கின்றனர். இரவு நேரங்களில் அதிக அளவு மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதால், அதை தடுக்கும் வகையில் பல்வேறு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அப்போது கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!