by Vignesh Perumal on | 2025-04-02 08:53 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினசரி அன்னதான திட்டம் தினமும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். அன்னதானத்தில் உணவருந்த வரிசையில் காத்திருக்கும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இக்கோவிலில் கோடை காலம் மற்றும் விடுமுறை காலத்தை முன்னிட்டும். பக்தர்கள் கூட்டத்தை கருதியும் இன்று 01.04.2025 முதல் 10.06.2025 வரை கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கல்யாண மண்டபத்தில் சிற்றுண்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. இது காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு கட்டணமில்லா சிற்றுண்டி தயிர் சாதம், புளியோதரை மற்றும் காய்கறி கூ.ட்டு உபயதாரர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 3,000 பக்தர்கள் மதிய வேளையில் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கி துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!