by Muthukamatchi on | 2025-04-02 05:27 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டியில் வசிக்கும் சந்திரா என்பவர் ஈகுடாஸ் தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றுள்ளார்.தொடர்ந்து பணம் கட்டி வந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தொடர்ந்து தவணைத் தொகை மாதம் தரும் கட்ட முடியவில்லை. நேற்று சரியாக 11:00 மணி அளவில் ஈகுடாஸ் கம்பெனியில் பணி புரியும் ஆறு நபர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து கடனை கட்டும்படி வற்புறுத்தி உள்ளனர். தொடர்ந்து 3 மணி நேரம் வீட்டின் முன்பாக அமர்ந்து கொண்டு பணம் கட்டினால் தான் நாங்கள் செல்வோம் என்று கட்டாயப்படுத்தி மன உளைச்சலை கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு மனவேதனையில் சந்திரா அரளி விதையை அரைத்து குடித்து இறந்துவிட்டார். இறந்த சந்திராவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.தனியார் பைனான்ஸ் கம்பெனிகள் வீடுகளுக்கு கடன் தருகிறோம் என்ற பெயரில் கூட்டு வட்டி போட்டு மக்களை தற்கொலைக்கு தூண்டும் நிலைக்கு வருகின்றனர். இது போன்ற சம்பவம் தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இதே நிலை காணப்படுகிறது. எனவே நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் கொடுத்து ஏழை எளிய மக்களின் உயிரைப் பறிக்கும் இந்த நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!