by Satheesh on | 2025-04-02 02:08 PM
கன்னியாகுமரி : கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமல மற்றும் கிராம உதவியாளர் பேபி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நெய்யூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மகன் ஆறுமுகம் வயது 56 என்பவர் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று வேண்டி தனது ₹ 30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்து உள்ளார். சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது V A O பரிந்துரை செய்து அதன் பின்னர் R I பரிந்துரை செய்த பின்னர் தாசில்தார் அலுவலகம் மூலமாக சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்து முதலில்V A O பரிந்துரை செய்ய வேண்டும். அதனால் V A O மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்த போது ₹30,000 மதிப்பு சொத்து சான்றிதழ் பெற பரிந்துரைக்க முடியும் என்று கூறி அதற்கு ₹4000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பேரம் பேசி ₹ 3000 தந்தால் ₹30,000 சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று கறாராக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். புகாரின் படி வழக்குப்பதிவு செய்த குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று 02-04-2025 காலை சுமார் 11:30 மணி அளவில் பதுங்கி இருந்தனர். அப்போது ரசாயனம் தடவிய ₹ 3,000பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரரான ஆறுமுகம் கொடுக்கும்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் பேபியிடம் கொடுக்க V A O கூறவே அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் அறிவுறுத்தலின்படி கிராம உதவியாளர் பேபி வாங்கும்போது மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன் துரை லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 30,000 சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய ₹ 3000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக லஞ்சம் பெற்று கைதாகும் நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!