by Satheesh on | 2025-04-01 07:34 PM
நித்தியானந்தா உயிரிழந்தார் என சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இதற்கு எந்த அதிகாரப்பூர்வ மறுப்பும் வெளிவராத நிலையில், நித்தியின் சகோதர மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம், "இந்துத் தர்மத்தை காப்பாற்றுவதற்காக சாமி (நித்தியானந்தா) உயிர் தியாகம் செய்துவிட்டார்" என்று அறிவித்துள்ளார். இது உண்மையா? இல்லையா ? என்பதை உறுதிப்படுத்தும் தகவல் இதுவரை வெளியாகவில்லை. நித்தியானந்தா பற்றிய செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் விருதுநகரில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.