by Satheesh on | 2025-03-31 01:57 PM
தேனி : பெரியகுளம் நகரில் போக்குவரத்து நிறைந்த, சோத்துப்பாறை அணைக்கு செல்லும் பிரதான ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அவசரகதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையிலும், இன்னும் சில நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற இருக்கின்ற நிலையிலும்,10 நாட்கள் தினமும் சுவாமிகள் நகர்வலம் வருவதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பங்குனி உத்திரத் தேர் திருவிழா நடக்குமா ? என பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகிறது. பாலம் கட்ட உத்தேசிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட எந்த துறைகளிடமும் எந்தவித கருத்தும் கேட்காமல் நெடுஞ்சாலைத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு, அவசரகதியில் பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. அவசரகதியில் பணிகள் நடப்பதால், மிக நீளமான கனரக வாகனங்கள் மற்றும் தேர் பவனி செல்லக்கூடிய நிலையில், உறுதியான தரமான கட்டுமானம் இருக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும்,மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்காமலும், குறுகிய இடங்களில் சாலைகளை அகலப்படுத்தாமலும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அட்வான்ஸ் ஆக புதிய கோடுகள் மட்டும் நடப்பட்டுள்ளன? மேலும், தேர் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை எந்தவித நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனிடையே, கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் யாரும் கண்காணிப்பு செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் பணி நடக்கும் ரோட்டினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!