| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு IPL

2-வது முறையும் தோல்வி..! ரசிகர்கள் ஏமாற்றம்...!

by Vignesh Perumal on | 2025-03-31 07:43 AM

Share:


2-வது முறையும் தோல்வி..! ரசிகர்கள் ஏமாற்றம்...!

ஐபிஎல் தொடரின் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார். இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்தது. சிஎஸ்கேவில் நாதன் எல்லிஸுக்குப் பதில் பிளேயிங் லெவனில் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டிருந்தார். ஆர்சிபியில் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ஆட்டம் தொடங்கியது, ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். நூர் அகமது வீசிய 5-வது ஓவரில் சால்ட்டை அபாரமாக ஸ்டம்பிங் செய்து சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி வெளியேற்றினார். அதற்கு முன் நடந்த ஆட்டத்திலும் இதே போல நூர் அகமது பந்து வீச்சில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதைத்தொடர்ந்து, வந்த தேவ்தத் படிக்கல், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அவர் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பெட் செய்ய வந்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் கோலி. லிவிங்ஸ்டன் 10 ரன்களில் போல்ட் ஆனார். அன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐ தோற்கடித்து பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

அதேபோல், நேற்று (மார்ச் 30) நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை எடுத்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னை தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர்.


இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment