by Vignesh Perumal on | 2025-03-31 06:03 AM
இஸ்லாமிய காலண்டரின்படி வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரம்ஜான் பண்டிகை என்பது பொதுவாக பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாளைக்குபிறகு கூட கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியாவில் இன்று முதல் பிறை பார்க்கப்பட உள்ளது. அங்கு எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி செயல்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: "ரம்ஜான் தினமான மார்ச் 31 ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும்" என்று RBI உத்தரவு பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து தற்போது, உடன்குடி அனல் மின் நிலைய பணியாளர்களுக்கு ரமலான் திருநாள் அன்று விடுமுறை அளிக்கப் போவதில்லை என அந் நிர்வாகம் வாய்மொழியாக தகவலை வெளியிட்டுள்ளது. இச்செயலை கண்டித்து உடன்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கந்தசாமி அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "உடன்குடி அனல் மின் நிலையப் பணியில் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய திருநாளாகிய ஹஜ் பெருநாளுக்கு விடுமுறை என்பது தவிர்க்கப்பட்டு தற்போது அனைத்து இஸ்லாமியர்களும் கொண்டாடும் தியாக திருநாளாம் ரமலானிலும் கட்டாயம் பணியை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ள BHEI நிறுவனத்தின் பொது மேலாளர் அவர்களை கண்டித்தும் அன்று வேலை பார்த்தால் அதிக நேர கணக்கில் OT சம்பளம் வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!