by Vignesh Perumal on | 2025-03-30 05:27 PM
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமையில் பழனி சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பழனி உழவர் சந்தை அருகில் பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
மேலும், தனியார் மருந்தகத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாமும் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள்- பாலாஜி, கதிரேசன் - பழநி