by Vignesh Perumal on | 2025-03-30 09:53 AM
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய காலண்டரில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் ஒன்பதாவது மாதமாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாக கருதும் மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிக கடுமையான நோன்பு கடைபபிடிப்பது வழக்கம். புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது என்பது இஸ்லாமின் ஐந்து முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இறைவன், புனித குரானை உலகிற்கு அருளிய மாதம் என்பதால் ரமலான் மாதம் மிகவும் புனிதத்தன்மை நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் இந்த மாதத்தில் நோன்பு கடைபிடித்து, இறைவனுக்கு நெருக்கமானவர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை இஸ்லாமியர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி செயல்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: "ரம்ஜான் தினமான மார்ச் 31 ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும்" என்று RBI உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!