by Vignesh Perumal on | 2025-03-30 09:22 AM
தென்னிந்தியாவில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒன்றாக யுகாதி பண்டிகை திகழ்கிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெலுங்கு வருட பிறப்பின் முதல் நாள் யுகாதி பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது.
இப்பண்டிகையானது, உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச்சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு உகாதி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் இன்று (30-03-2025) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது திமுக அரசு.
உகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அதிமுக ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ஆம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப் படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர்.
தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!