by Muthukamatchi on | 2025-03-29 09:56 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லபட்டியைச் சேர்ந்த காவலரை கல்லால் அடித்து கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த கம்பம் போலீசார்..உசிலம்பட்டி அருகே போலீஸ்காரரை கொலை செய்த கொலைக் குற்றவாளியை, கம்பம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிந்துபட்டி டாஸ்மாக் அருகே நாவர்பட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து கொலைக் குற்றவாளியான பொன்வண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலைத் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொன்வண்ணனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, போலீசாரை பார்த்த பொன்வண்ணன் கம்பம் மெட்டு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியின் அருகே தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்றுள்ளனர்.அதில், சுந்தரபாண்டி என்ற போலீசார் மற்றும் கொலைக் குற்றவாளி பொன்வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பொன்வண்ணன் மற்றும் சுந்தரபாண்டி என்ற போலீஸ்காரர் ஆகிய இருவருக்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் பொன்வண்ணன் இறந்ததாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ்காரரை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிபட்டி தாலுகா தேனி மாவட்டம் நிருபர் மீனாட்சி சுந்தர்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!