by Satheesh on | 2025-03-28 11:36 PM
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *மருத்துவர்.R.ஸ்டாலின் I.P.S.,* அவர்கள் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் *திரு. பார்த்திபன் T.P.S,* அவர்களின் மேற்பார்வையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர் அழகிய மண்டபம்,முழகுமூடு கோழிபோர்விளை பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது,18 வயது பூர்த்தி அடையாத 05 சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 08 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக "JUVENILE DRIVING CASE" under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பத்மநாபபுரம் கனம் JM I நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் கோப்புக்கு எடுக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் பெற்றோர்களுக்கு கீழ்க்காணும் தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
(1) ரூ 25000 அபராதம்
(2) மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை
(3) ஒரு வருடம் வாகன பதிவு ரத்து. வாகனங்கள் வழங்கப்படாது.
(4) சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை.ஆகவே, பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில், சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள் கவனமாக செயல்படுமாறு பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!