by Muthukamatchi on | 2025-03-28 03:44 PM
சோழவந்தான் பிரளய நாத சிவன் திருக்கோவில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பங்குனி மாத பிரதோஷத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால் தயிர் நெய் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் வஸ்திரம் கொண்டைக்கடலை மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரங்களால் சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஆலய செயல் அலுவலர் இளமதி,கணக்கர் பூபதி, பாஜக மாநில விவசாய அணிதுணைத் தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், தாளாளர் மருது பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!