தமிழகம் இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும் - விஜய்
by yogabalajee on |
2025-03-28 02:22 PM
Share:
Link copied to clipboard!
த.வெ.க வீன் முதல் பொதுப்குழு சென்னையில் திருவான்மியூரில் நடந்து வருகிறது, இதில் த.வெ.க வின் தலைவர் விஜய் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.
அவர் பேசியது :
என் நெஞ்சில் குடியிருக்கும் என்று தனது உரையை தொடங்கினார் விஜய்
ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற அரசியலா? இல்ல ஒரே ஒரு குடும்பம் நல்லா இருக்குன்னு நினைக்கிறதா அரசியலா? எல்லாருக்கும் நல்லது நடக்கிறதுதானே அரசியல்; அதுதான் நம்மளுடைய அரசியல்
தமிழகம் இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் TVK vs DMK இதையேதான் போட்டி
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெயரை மட்டும் வீரப்பால் சொன்னால் பத்தாது அரசியலிலும் அதை காட்ட வேண்டும்
ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை பாசய ஆட்சி என்று சொல்லும் நீங்கள் இங்கு மட்டும் என்ன செய்றீங்க அதுக்கு கொஞ்சம் குறைவில்லாத ஆட்சி தானே இங்க நடக்கிறது. தடையை மீறி மக்களை சந்திக்க வேண்டும் நினைத்தால் போய் தீருவேன் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால்தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவனெல்லாம் முதல்வராக கனவு காண்கிறீர்கள் என்று சொல்கிறீர்களே? அப்படி என்றால் ஏன் மத்த எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எங்கள் கட்சிக்கு தருகிறீர்கள்?