by Vignesh Perumal on | 2025-03-28 02:02 PM
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் அதீத அளவாக உள்ளது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காரணமாக, சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவதால் தங்களின் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர் நீதிமன்றம் விதித்திருக்கிறது என நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!