by Vignesh Perumal on | 2025-03-27 12:18 PM
மத்திய உள்துறை அமைச்சர் ரமேஷ் சா மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி பேச்சு நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு.
சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும்.டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார். இபிஎஸ் மற்றும் அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக திகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், 'தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான இபிஎஸ், இந்தியாவின் இரும்பு மனிதரான அமித்ஷாவும் சந்தித்துக் கொண்டனர்' என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!