by Vignesh Perumal on | 2025-03-26 09:06 PM
சமீப காலமாக சமூக வலைதள பக்கத்தில் பிரபலமாக அறியப்படும் சவுக்கு சங்கருக்கு சென்னையில் வீடு உள்ளது. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் போடப்பட்டன. இதனால் சவுக்கு சங்கரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சூழலில், ஜாமீன் பெற்று சவுக்கு சங்கர் வெளியே வந்தார். இருப்பினும், தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் சவுக்கு சங்கர் காணொளி காட்சி வெளியிட்டு வந்தார்.
இச்சூழலில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி சவுக்கு சங்கர் இல்லத்தில் இன்று காலை மர்ம கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இச்சூழலில் சமூக வலைதள பக்கத்தில் பிரபலமான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது சிபிசிஐடி அதிரடி காட்டியுள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!