தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி பேச்சு நடக்கும். டாஸ்மாக் ஊழல் குறித்து முழு விசாரணை தேவை... எடப்பாடி...!!
by Yogabalajee on |
2025-03-26 03:14 PM
Share:
Link copied to clipboard!
உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!!
மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது.
கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சு நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை.
கூட்டணி வேறு, கொள்கை வேறு. சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும் - இபிஎஸ்.
தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம்.
தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம்
இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்.
தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார்