| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழனி கொடைக்கானல் சாலையில் அதிகரித்து வரும் விபத்து...??? காவல்துறை வனத்துறை, அலட்சியம்...!!!!

by Muthukamatchi on | 2025-03-26 01:52 PM

Share:


பழனி கொடைக்கானல் சாலையில் அதிகரித்து வரும் விபத்து...??? காவல்துறை வனத்துறை, அலட்சியம்...!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  கொடைக்கானல் சாலையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரின் அலட்சியத்தால் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்.... அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சாலை முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் மது பாட்டில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் உயிருக்கே ஆபத்தாகும் அவல நிலை உள்ளது. சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்தும் மது பிரியர்கள் வாட்டர் பாட்டில் டம்ளர் மது பாட்டில் உள்ளிட்டவற்றை வனப்பகுதியில் எரிந்து  செல்வதால் வனவிலங்குகளின் உயிர் கேள்விக்குறியாகிறது ! இது ஒரு புறம் என்றால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அதிவேகமாக செல்வது தொடர்கதையாகிறது . நேற்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிந்த நிலையில் பள்ளி சீருடைகளுடன் மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது இவ்வாறு செல்வோர் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்குவது பலரும் அறிந்ததே. எனவே காவல்துறை மற்றும் வனத்துறை இணைந்து சோதனை சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் எடுத்து செல்வோரை தடுத்து நிறுத்தி சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான பசுமையான கொடைக்கானலை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது...

தி .முத்துக்காமாட்சி எவிடன்ஸ் ஆசிரியர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment