புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது.
அமைவிடம்: இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர்: இத்தலத்தின் மூலவர் சத்தியகிரீசுவரர் ஆவார்.
இறைவி: வேணுவனேஸ்வரி ஆவார்.
அமைப்பு: பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கடுத்துள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயிலாக உள்ளது.
மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சிவன் கோயிலைத் தனியாகச் சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.