| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பாரதியார் இல்லத்தில் திடீர் சம்பவம்...! அச்சத்தில் சுற்றுலா பயணிகள்...!

by Vignesh Perumal on | 2025-03-25 10:23 PM

Share:


பாரதியார் இல்லத்தில் திடீர் சம்பவம்...! அச்சத்தில் சுற்றுலா பயணிகள்...!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாம் வார்டு பெருமாள் கோவில் பகுதியில் முண்டாசுகவி பிறந்த குடில் உள்ளது. இந்த குடில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக வேலை செய்து  வருகிறார். இக்குடில்  காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தது. இங்கு பகுதி நேர நூலகமும் பயன்பாட்டில் உள்ளது. அரசு விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் அதிகமாக வருவது வழக்கம். மற்ற நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிட வருவார்கள்.

இச்சூழலில், இன்று மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடினார். அப்போது, திடீரென பாரதியார் இல்லத்தின் முன் பகுதியான வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவை சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியார் பிறந்த இல்லத்துக்கு வந்து பார்வையிட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியார் இல்லத்துக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்தனர்.
பாரதியார் இல்லம் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகள் ஆகிறது என கூறப்படுகிறது. இந்த இல்லம் சுமார் 7 தலைமுறை காலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உள்ள தரைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம், தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே புராதனமாக காணப்படுகிறது. இங்கு 4 அறைகள் உள்ளன. முதல் அறையில், பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அங்கேயே பகுதி நேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2-வது அறையில், அவர் பிறந்த இடத்தில் அவருக்கு தனி சிலை வைக்கப்பட்டுள்ளது. 3-வது அறையில், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அவரின் குடும்ப மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள், அவர் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியின் குடும்ப வம்சாவளி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளன. 4-வது அறை சமையலறை. அங்கு புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பாரதியார் (1882-1921)
கருத்துப்படம்:
தமிழ்இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் புதுமைகளைத் தொடங்கி வைத்த பாரதியார். இதழியலிலும் புத்தெழுச்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
கருத்துப்படம்:
அன்றாடம் நடைபெறும் அரசியல் சமூக நிகழ்வுகள் மீதான என்னலும் நகைச்சுவையும் திறனாய்வுக் கருத்தின் வரைகோட்டு ஒலியமெகருத்துப்படம் கருத்துப்படம்என்பதும் ஒருங்கமாகவே கருதப்படுகின்றது. பல சொற்கள் வெளிப்படுத்துவதை ஒரு சுருத்துப்படம் சில கோடுகளின் வழி எளிதில் உணர்த்திவிடுகின்றது ஆங்கிலத்தில் 'கார்ட்டூன்' (carroon) என்று அழைக்கப்படும் இது தமிழில் கருத்துப்படம் விகடசித்திரம் வேடிக்கைசித்திரம், கேவிச்சித்திரம் விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இதனைப் பாரதியார் 'விசுடசித்திரம்' என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் கருத்துப்படம்:
1850ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான 'தில்லி ஸ்கெட்ச் புக்' (Delhi Sketch Book). என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும். வங்காளத்திலிருந்து வெளியான அமிர்த பஜார் பத்திரிகா, தில்லியிலிருந்து வெளியான 'இந்தியன் பஞ்ச்', 'அவத் பஞ்சி' ஆகிய இதழ்களும் தொடக்க கால கருத்துப்படங்களுக்காக அறியப்படுகின்றன.

அறிவைத் தேடிச்செல். பணம், புகழ், அந்தஸ்து எல்லாம் தானாகவே தேடி வரும். பெண்களின் பங்களிப்பு இருந்தால் தான் குடும்பம் முன்னேறும். கஷ்டம் வரும்போது தான் உனக்கு பல உண்மைகள் தெரியவரும். ஒருவரின் கஷ்டம் அறிந்து உதவி செய்யும் மனமே உன்னை உயர்த்தும். கடவுள் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார். குழந்தைக்கு விளையாட்டுடன் வாழ்க்கை கல்வியையும் சொல்லிக்கொடுங்கள்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment