by Vignesh Perumal on | 2025-03-25 05:36 PM
இராமநாதபுரம் சரக டிஐஜி., திருநெல்வேலி சரக டிஐஜி., உள்ளிட்ட ஐபிஎஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி சரக டிஐஜி., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபிநவ் குமார், மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி, இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,ஆகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுஜாதா, ஈரோடு எஸ்.பி., ஆகவும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், சென்னை போலீசின் உளவுப்பிரிவின் துணை கமிஷனர் ஆகவும், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகவும், சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் மேகலினா ஐடன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும், சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத், சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு ணை கமிஷனர் ஆகவும், பழநி,தமிழக போலீஸ் சிறப்பு படை பிரிவு 14வதுபட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் - சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் மாற்றமானது மாவட்டம் ரீதியாக பல்வேறு குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!