by Vignesh Perumal on | 2025-03-25 08:17 AM
திண்டுக்கல் மாவட்டம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,55,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த கோபால்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் குமார்(26) என்பவரை சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள், நீதிமன்ற முதல்நிலை காவலர் திருமதி.நதியா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (24.03.2025) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி அஜய்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,55,000/- அபராதமும், விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.மேலும் இந்த ஆண்டு இதுவரை 13 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!