by Vignesh Perumal on | 2025-03-24 05:54 PM
தமிழ்நாடு ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்த வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23 வரை தடை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஜாக்டோ ஜியோ அறிவித்த வேலை நிறுத்தத்தில் கூறியிந்ததாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இச்சூழலில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது. மேலும், மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமாறு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!