by Satheesh on | 2025-03-24 05:33 PM
கன்னியாகுமரி: மாங்குளம் பரிசுத்த பவுல் லுத்தரன் சபையின் போதகர் ப . சாம் சுதாகர் அவரது சபை சார்பாக நாகர்கோவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நேசமணி காவல் நிலையத்திலும் ஒரு புகார் ஒன்றை கொடுத்து உள்ளனர் - அதில் ஜெர்மனி மிஷ்னரியால் இந்தியாவில் 1895 ஆம் ஆண்டு தமிழகம், கேரளா, கர்நாடாகா, மும்பை உள்ளிட்ட இந்தியாவில் பல மாநிலங்களில் இந்திய சுவிசேஷ லுத்தரன் சபைகள் தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 4 உயர்நிலை பள்ளிகள், 7 மேல் நிலைப் பள்ளிகள், 6 நடுநிலை பள்ளிகள், 72 தொடக்கப் பள்ளிகள், 5 சிறப்பு பள்ளிகள், ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 2 CBSE பள்ளிகள். ஒரு கன்கார்டியா இறையியல் கல்லூரி மற்றும் 3 மருத்துவ மனைகளும் இந்த சபையின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டு இந்த கன்கார்டியா இறையியல் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் உட்பட 5 பேர் இதன் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து போலி டிரஸ்ட் உருவாக்கி வெளிநாட்டில் இருந்து சபைக்கு வந்த கோடி கனக்கான பணங்களை முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கன்கார்டியா இறையியல் கல்லூரி, பங்களாக்கள், பேராசிரியர்கள் தங்கும் இல்லங்கள், மாணவர் விடுதிகள், ஊழியர்களின் இல்லங்கள், வனிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்திகளின் மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும், இதே போன்று இந்திய சுவிசேஷ லுத்தரன் சபைக்கு மேலும் 28000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் இவை அனைத்தும் அபசரிக்க திட்டமிட்டு உள்ளதாக இந்த மனுவில் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. நேசமணி நகர் காவல் நிலையத்தின் ஆலோசனைப் படி மாங்குளம் பரிசுத்த பவுல் லுத்தரன் சபை சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மாவட்த்தில் பெரும் பரப்பரப்பை ஏற்பத்தி உள்ளது.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்தேனி.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!