by Muthukamatchi on | 2025-03-24 03:18 PM
விருதுநகர் மாவட்டம், புனித இன்னாசியார் ஆலயத்திற்காக, கோட்டைப்பட்டி கிராமத்தில் வாங்கப்பட்ட நிலத்தை தனது பெயரில் பதிவு செய்த பங்கு தந்தை அந்தோணி பாக்கியம் மீது நடவடிக்கை கோரி வழக்கு.மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவு.மதுரை கே.புதூரைச் சேர்ந்த அலெக்ஸ் ஆண்டனி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்அதில், விருதுநகர் மாவட்டம் மதுரை உயர்மறை மாவட்டத்தின் கீழ் வருகிறது. அந்தோணி பாக்கியம் என்பவர் விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தின் பங்கு தந்தையாக பொறுப்பில் இருக்கிறார். விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கர் 92 சென்ட் நிலத்தையும், அதே கிராமத்தில் 16 செண்ட் நிலத்தையும் ஆலயத்திற்காக எனக்கூறி வாங்கி அவரது பெயரில் பதிவு செய்திருக்கிறார். மதுரை உயர்மறை மாவட்டத்தில் இருந்து ஆலயத்திற்காக வழங்கப்படும் பணத்திலிருந்து இந்த நிலம், வாங்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் மதுரை மாவட்டத்தின் பெயரிலோ அல்லது ஆலயத்தின் பெயரிலோ அந்நிலம் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சொத்து மதுரை உயர்மறை மாவட்டத்திற்கு சொந்தமானது. ஆனால் பங்கு தந்தையாக இருக்கும் அந்தோணி பாக்கியம் அவரது பெயரில் சொத்துக்களை பதிவு செய்துள்ளார்.இது சட்ட விதிகளுக்கும், திருச்சபை சட்டத்திற்கும் எதிரானது. அதோடு நிலத்திலிருந்து வரும் பயன்களை அவரே அனுபவித்து வருகிறார். ஆலயத்திற்கான சொத்துக்களை அவரது சொந்த ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருகிறார். இது தொடர்பாக மதுரை உயர்மறை மாவட்டத்தின் தற்போதைய பரிபாலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே விருதுநகர் மாவட்டம், புனித இன்னாசியார் ஆலயத்திற்காக, கோட்டைப்பட்டி கிராமத்தில் வாங்கப்பட்ட நிலத்தை இன்னாசியார் ஆலயத்தின் பெயரில் பதிவு செய்வதோடு, தனது பெயரில் பதிவு செய்து, ஆதாயம் தேடியிருக்கும் பங்கு தந்தை மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பான எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கே.எஸ்.பாலகிருஷ்ணன் மதுரை.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!