by Muthukamatchi on | 2025-03-23 08:45 PM
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருரஞ்ஜீத் சிங், இ.ஆப அவர்கள் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன் அவர்கள் முன்னிலையில் இன்று (23.03.2025) தொடங்கி வைத்து. புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள்.புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், அந்த காலம் முதல் இந்தகாலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காகவும் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆவது புத்தகத் திருவிழா இன்று (23.03.2025) முதல் 30.03.2025 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் உத்தரவுப்படி, சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறப்பாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டாக புத்தகத் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில் "இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம். "நான் முதல்வன்" திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.கல்விக்கு மட்டுமில்லாமல் மாநில, இந்திய மற்றும் உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேனி மாவட்டத்தில் புதிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அரசு பணிகளில் இடஒதுக்கீடு பெற்று முன்னுரிமை பெறலாம்.இந்தியாவிலே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளது. மாணவர்களிடம் கல்வி என்ற ஆயுதத்தை கொடுத்துவிட்டால் அவர்களால் உலகைக்கூட ஆள முடியும்.
இப்புத்தத் திருவிழா சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அருமையான முயற்சியாகும். போட்டித்தேர்வுகளுக்குத் தேவையான அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,புதுப்புது சிந்தனைகளை மாணவர்களிடையே உருவாக்க இதுபோன்ற புத்தத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதிக புத்தகங்களை வாசிப்பதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் வகையில் அனைத்து வகையான புத்தகங்களும் இப்புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இன்று முதல் 8 நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் பிற்பகல் 02.00 மணி மாலை 4.00 மணி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை உள்ளுர் எழுத்தாளர்களின் இலக்கிய மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு பேச்சாளர்களின் சிந்தனை அரங்கம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடுஎனவே, தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சியை மாணவ, மாணவிகளை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி உங்களுடைய தேடலுக்கான சிறந்த புத்தகங்கள் மற்றும் அறிவு சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி திட்ட இயக்குநர்கள் திருமதி அபிதா ஹனீப் (ஊரக வளர்ச்சி முகமை), திருமதி சந்திரா (மகளிர் திட்டம்), உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, இ.கா.ப. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.லெட்சுமணன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் திருமிதுன்சக்கரவர்த்தி, நகர்மன்றத்தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்). திருமதி ராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்), திருமதி அய்யம்மாள் ராமு (சின்னமனூர்), பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துணைத்தலைவர் திரு.மணிமாறன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.கலைச்செல்வி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி நிர்மலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துமாதவன், மாவட்ட நூலக அலுவலர் திரு.சரவணக்குமார். தாட்கோ மேலாளர் திருமதி சரளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ராஜராஜேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி சந்தியா, உதவி இயக்குநர் (தமிழ்வளர்ச்சித்துறை) திரு.இளங்கோ, துணை ஆட்சியர் (பயிற்சி) திருடினு அரவிந்த், அனைத்து பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!