by Muthukamatchi on | 2025-03-23 07:12 PM
திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் அவர்கள் உத்தரவின் பேரில்
பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் அறிவுரையின் படி பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான
60 மேற்பட்ட காவலர்கள் பழனி பேருந்து நிலையத்தில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, புகையிலை குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது
மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் நோக்கத்தோடு தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் இச்செயல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் செய்தி பாலாஜி மற்றும் கதிரேசன் பழனி.