by Muthukamatchi on | 2025-03-23 06:50 PM
தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பழனி நகராட்சி சார்பில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்விதமான நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என்று புகார் பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக தெரு நாய்கள் வெறி நாய்கள் பக்தர்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது பழனியில் நேற்று ஒரே நாளில் 15க்கு மேற்பட்டோரை வெறி நாய் தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது.. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரு நாய் மற்றும், வெறி நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் பழனி நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வெறி நாய் கடி இலவசம் வாருங்கள் வரவேற்கிறோம்.
நிருபர்கள் பாலாஜி ,கதிரேசன் பழனி
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!