| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

பிள்ளைகளுக்கு கொடுக்கும் பண்பை பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும்...!!! சொற்பொழிவாளர் பேச்சு...!!!

by Muthukamatchi on | 2025-03-22 09:02 PM

Share:


பிள்ளைகளுக்கு கொடுக்கும் பண்பை பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும்...!!! சொற்பொழிவாளர் பேச்சு...!!!

பிள்ளைகளுக்கு கொடுக்கும் பண்பை பெற்றோர் சொல்லித் தர வேண்டும்

சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் பேச்சுபிறருக்கு தொண்டு செய்யும் பழக்கத்தை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும் என சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் பேசினார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் சார்பில், 'உலக தண்ணீர் தின'த்தை முன்னிட்டு மதுரையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் தலைவர் நெல்லை பாலு தலைமை வகித்தார். சி.எம். ஆதவன் வரவேற்றார். பொருளாளர் டி.சண்முகம் முன்னிலை வகித்தனர்.


நிகழ்வில் மதுரை 'வைகை நதி மக்கள் இயக்க' ஒருங்கிணைப்பாளர் ராஜன் அவர்களின் சேவையை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது 'எது தொண்டு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது


, " நம் முன்னோர்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே எனச் சொல்லிச் சென்றுள்ளனர். தொண்டு செய்வதை நம் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.  உலகத்திற்காக சேவை செய்வது பெரிய விஷயம். நாம் சொல்லித் தருவதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பிறருக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை பெற்றோர் ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தை சாப்பிடாவிட்டால், வேறு குழந்தைக்கு கொடுத்து விடுவேன் போன்ற எதிர்மறைச் சொற்களை பேசக்கூடாது. நாமும் நல்லதையே பேச வேண்டும்.தொண்டு செய்ய மிகப் பெரும் பொருளாதாரம் தேவை என நினைக்கக் கூடாது. நம்மிடம் இருப்பதைக் கொண்டு கூட தொண்டு செய்யலாம். அதற்கு பணம் தேவையில்லை, மனம் தான் தேவை. வெயில் காலம் வரவிருக்கிறது. தெருவில் போவோர்களுக்காக வீட்டு வாசலில் தண்ணீர் வையுங்கள். அதுவே பெரிய தொண்டு தான். பிறருக்கு உதவி செய்யும் குணத்தில் தான் மன நிறைவு கிடைக்கும் "இவ்வாறு அவர் பேசினார். செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

செய்தி, படம்: கூடலூர் சி.எம். ஆதவன்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment