by admin on | 2026-11-28 08:17 PM
தேனி மாவட்டம் தேவாரத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை....?????
உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை.????
தேனி மாவட்டம் தேவாரம் நாடார் வடக்குத் தெரு , நந்தவனத் தெரு பகுதியில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்டவரின் தலை,பின் கழுத்து, வலது காதுக்கு மேல் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் முகம் சிதைந்த சிதைந்த நிலையில் காணப்பட்ட நபரைபடுகொலை செய்யப்பட்டது யார் ?கொலை செய்தது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில்,தேனி எஸ்.பி.பிரவீன் கௌதம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,படுகொலை செய்யப்பட்டது தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த நந்தகோபால் மற்றும் முருகேஸ்வரி தம்பதிகளின் மகன் விவேக் (35)என்பதும் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர்,வாடகை வாகன ஓட்டுனராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்,விவேக் ஏன் அப்பகுதிக்கு வந்தார்?அவரை கொலை செய்தது யார்?கொலைக்கான காரணம் என்ன?
என்பது குறித்து அப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
T முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர் . 9842337244
தேனி மாவட்டத்தில் தொடரும் கொலை குற்றங்கள் உறங்கி கொண்டிருக்கின்ற உளவுத்துறை...???
விற்பனையில் சாதனை படைக்கும் தேனி உழவர் சந்தை அதிகாரிகள் வியப்பு...!!! மா பாண்டியன்...!!
தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு...!!!!
கன்னியாகுமரியில் குடும்பத்தினர் கண் முன்னே கொடூர கொலை.....???
விபத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல இரண்டு மணி நேரம் காத்திருப்பு...??? இந்த அவலம் தேனியில் தான்...!!!