| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கஞ்சா விற்பனை 8 பேர் கைது...!!

by Muthukamatchi on | 2025-03-22 06:58 AM

Share:


கஞ்சா விற்பனை 8 பேர் கைது...!!

பழனியில் கஞ்சா விற்பனையில் எட்டு பேர் கொண்ட கும்பல் கைது திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டம் பழனி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில்  இளைஞர்கள் கஞ்சா உபயோகிப்பதாக  பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்கள் உத்தரவின் பெயரில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் அறிவுரையின் படி  நகர காவல் சார்பு ஆய்வாளர் திரு விஜய் தலைமையில் ஆன  காவலர்கள் சரவணன், யுவராஜ்,செல்வகுமரன், பிரபு, செந்தில்குமார் கார்த்தி, உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில்    ரோந்து மேற்கொண்ட பொழுது  பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புரம் சந்தேகத்து இடமளித்த வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை  நோக்கி சென்ற காவல்துறையினரை கண்டவுடன்  தப்பி ஓட முயற்சி செய்தனர்  பின்பு காவல் துறை பிடித்த பின் அவர்களை சோதனை மேற்கொண்டதில்   கஞ்சா வைத்திருந்த பழனி தெற்கு  அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாண்டி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த  பால்ராஜ், சங்கிலி தேவர் சந்து பகுதியை சேர்ந்த தினேஷ் சிவகங்கை மாவட்ட கல்லல் பகுதியை சேர்ந்த திருச்செல்வம் சிவமணி  விருமாண்டி மற்றும் சிவகிரி பட்டியை சேர்ந்த முத்தையா என்பவர்களை பிடித்து   தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 500 கிராம் கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன  பின்பு கீழ்க்கண்ட நபர்களின்  மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைவில் பிடித்து பழனியை குற்றமற்ற நகராக மாற்றி காட்டுவேன் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment