by Vignesh Perumal on | 2025-03-21 06:15 PM
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2022ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்ததை உறுதிபடுத்தியிருந்தது. மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டான ரம்மி, போக்கர் (ஒரு வகையான சீட்டாட்டம்) விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததுடன், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது.
புது விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போல, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்தவும், விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் வைத்து விளையாட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆன்லைன் விளையாட்டுக்களால் 2019 முதல் 2024 வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டது, தடை செய்வதற்காக அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது என்று தமிழக அரசு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்த வழக்குகளை மார்ச் 27க்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!