by Vignesh Perumal on | 2026-04-05 06:43 PM
திண்டுக்கல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பங்குதாரர்களின் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் ₹11.25 கோடி மோசடி செய்த புகாரில், 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பணியாற்றிய மேலாண்மை ஊழியர்களே, அதன் உரிமையாளரை ஏமாற்றிப் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பத்மநாபன் மகள் சுபாஷினி (54) இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தின் நிர்வாகப் பங்குதாரராக உள்ளார்.
இந்த வணிக வளாகத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதற்காக, கரூரைச் சேர்ந்த கதிர்வேல் (70) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பத்மா, சுதாராணி, ஜெயந்தி ஆகிய நால்வரைச் சுபாஷினி பணியில் அமர்த்தியிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நால்வரும் இணைந்து திட்டமிட்டுப் பெரும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். வணிக வளாகத்தின் உண்மையான பங்குதாரர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைத் தயாரித்துள்ளனர்.
இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, வணிக வளாகத்தில் உள்ள கடைகளை உரிமையாளருக்குத் தெரியாமல் மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுவது மற்றும் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் ₹11,35,16,978 (பதினோரு கோடியே முப்பத்தைந்து லட்சம்...) அளவிற்குப் பண மோசடி செய்துள்ளனர்.
நிர்வாகப் பணிகளில் முறைகேடு நடப்பதைக் கண்டறிந்த சுபாஷினி, இது குறித்துக் கதிர்வேல் உள்ளிட்ட நால்வரிடமும் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முறையான பதில் அளிக்காமல், சுபாஷினிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார்.
எஸ்பி-யின் உத்தரவின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த கும்பலின் முக்கிய நபரான கதிர்வேலை (70) போலீசார் இன்று கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பத்மா, சுதாராணி, ஜெயந்தி ஆகிய மூவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த மெகா மோசடி சம்பவம் திண்டுக்கல் வர்த்தகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !