by Vignesh Perumal on | 2026-04-05 05:46 PM
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தியுள்ள "நம்பிக்கை துரோக" புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக - தேமுதிக இடையே ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பிரேமலதா தனது பேட்டியில், "2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தபோது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொடுத்தார். இதோ அந்த ஒப்பந்தப் பத்திரம்," என்று கூறி ஒரு காகிதத்தை ஊடகங்களிடம் காண்பித்தார்.
அந்த ஒப்பந்தத்தில் ஆண்டைக் குறிப்பிடுமாறு நான் கேட்டபோது, 'என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அவரது வார்த்தையை நம்பி நான் அதில் ஆண்டைக் குறிப்பிட வற்புறுத்தவில்லை. ஆனால், அந்த நம்பிக்கையை அவர் இன்று உடைத்துவிட்டார்.
அதிமுக மீதான மரியாதையாலும், அரசியல் கண்ணியத்தைக் கடைபிடிக்கவுமே இவ்வளவு காலம் இந்த ஒப்பந்தத்தை நான் வெளியிடாமல் இருந்தேன். ஆனால், தற்போது அவர் தேமுதிகவை இழிவாகப் பேசுவதால் இதை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது."
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களில் எடப்பாடி பழனிசாமி தேமுதிக குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுத்த பிரேமலதா, "ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் தர பேச்சாளரைப் போலத் தரக்குறைவாகப் பேசக்கூடாது. துரோகம் இழைத்தவர் அவரே தவிர, தேமுதிக அல்ல.
2024-ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, இப்போது எங்களை விமர்சிப்பது அவரது அரசியல் வீழ்ச்சியையே காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்," எனச் சாடினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ராஜ்யசபா சீட் வழங்கப்படாதது குறித்து தேமுதிக தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தது. கடந்த ஜூன் 2025-ல் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போதும் இந்த விவகாரம் வெடித்தது. தற்போது தேர்தல் நேரத்தில் நேரடியாகப் பிரேமலதா ஆதாரத்துடன் களமிறங்கியுள்ளது அதிமுக கூட்டணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தரப்பில் இதற்குப் பதிலடி கொடுக்கப்படுமா அல்லது இந்த விவகாரம் தேமுதிகவின் தேர்தல் வியூகத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !