by Vignesh Perumal on | 2025-03-20 07:42 AM
நாமக்கல் மாவட்டம் அருகேயுள்ள மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சபரிமலை சென்றுவிட்டு அதே சமயம் பழனிக்கு வழிபடச் சென்றுள்ளனர். அச்சமயம், செல்வமணி வயது 47, என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இச்சூழலில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக செல்வமணியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அதைத்தொடர்ந்து, இராமேஸ்வரம் கோயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் மயங்கி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வரிசையில் மேலும் எத்தனை உயிர்கள் பிரியப் போகிறதோ என்ற அச்சத்தில் தமிழக மட்டுமின்றி வடமாநில ஆன்மீக பக்தர்கள் உள்ளனர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இந்துத்துவா அமைப்புகளும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இச்சூழலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கையில் கூறியிருப்பதாவது இவர்கள் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தேர்தல் எதிரொலி...! கூட்டங்கள் ரத்து...! வேண்டுகோள்...! முக்கிய அறிவிப்பு...!
தேனியில் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு...! பரபரப்பு பேனர்...!
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!