by Vignesh Perumal on | 2026-04-05 01:06 PM
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் மில் அதிபரை வழிமறித்துத் தாக்கி, நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்துப் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மில் அதிபர் ஒருவரைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொழிலதிபர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த துரை (49) இவர் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்பு ஆலைகளை (Mills) நடத்தி வருகிறார். துரை அவர்களுக்கு வடமதுரை மற்றும் ரெட்டியபட்டி ஆகிய இடங்களில் சொந்தமாக மில்கள் உள்ளன. நேற்று இரவு வடமதுரையில் உள்ள தனது மில்லில் பணிகளை முடித்துவிட்டு, காரில் ரெட்டியபட்டியில் உள்ள மற்றொரு மில்லுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சுமார் நள்ளிரவு நேரத்தில், கார் மு.மு. கோவிலூர் ரோடு - பெரியகோட்டை பிரிவு அருகே சென்றபோது, இயற்கை உபாதை கழிக்கத் துரை சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென துரையைச் சூழ்ந்து கொண்டது. அந்த கும்பல் துரையைச் சரமாரியாகத் தாக்கி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
அவரிடமிருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம், ₹12,000 ரொக்கப் பணம் மற்றும் ஏடிஎம் (ATM) கார்டுகள் உள்ளிட்டவற்றை அந்த கும்பல் பறித்துக் கொண்டு இருளில் தப்பிச் சென்றது.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட துரையிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். பெரியகோட்டை பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுங்கச்சாவடிகள், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளிகள் துரையின் நடமாட்டத்தை முன்கூட்டியே நோட்டமிட்டுப் பின்தொடர்ந்து வந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் மாவட்டத்தின் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஆள் நடமாட்டம் குறைந்த உட்புறச் சாலைகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தனியாகப் பயணிப்போர் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !